#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சென்னையில் இறைச்சிக் கடைகள் மூடல்! மாநகராட்சி ஆணையர் அதிரடி உத்தரவு!
சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகெங்கும் அதிதீவிரமாக பரவி கோரதாண்டவமாடி வருகிறது. இந்த கொடூர கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவிய நிலையில் இதுவரையில் 2000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 56 பேர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி தமிழகத்தில் இன்று மட்டும் 102 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு,வைரஸால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 411ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்கவும், சமூகவிலகலை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனாலும் அதனையும் மீறி பலரும் வெளியில் சுற்றித் திரிகின்றனர். மேலும் அவர்களுக்கு போலீசார் பல நூதன தண்டனை வழங்கியும் வருகின்றனர். மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இறைச்சி வாங்குவதற்கு கடைகளில் கூட்டம் குவிந்தது. அதனால் சமூக விலகல் என்பது பெரும் கேள்விக்குறியானது.
இந்நிலையில் சமூக விலகலை பின்பற்றும் நோக்கில் சென்னையில் உள்ள அனைத்து இறைச்சி கடைகள் மற்றும் மீன்கடைகளை மூட சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் நாளை முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரை இறைச்சி கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி உத்தரவை மீறி செயல்படும் இறைச்சிகடை மற்றும் மீன் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.