பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
திருவிழா பாதுகாப்பில் பெண் போலீஸ்... அத்துமீற முயன்ற பிரபல அரசியல் கட்சியின் பிரமுகர்.! காவல்துறை கைது நடவடிக்கை.!
சென்னை வளசரவாக்கம் பகுதியில் கோவில் திருவிழாவின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டிருக்கும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வளசரவாக்கம் ராமாபுரம் பகுதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் தீ மிதி திருவிழா நடைபெற்றது. இதன் பாதுகாப்பு பணிக்காக பெண் போலீசார் சென்றுள்ளனர். அதே பகுதியைச் சார்ந்த கண்ணன் என்பவர் அங்கு மெக்கானிக் கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் பாதுகாப்புக்குச் சென்ற பெண் போலீசிடம் இவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் போலீஸ் அளித்த புகாரின் பேரில் கண்ணனை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பெண் போலீசிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதியானது. மேலும் அவர் அந்தப் பகுதியில் திமுக பிரமுகராக இருப்பதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.