பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
சீன அதிபருக்கு மிகவும் வித்தியாசமாக மோடி கொடுத்த நினைவு பரிசு.! வைரலாகும் புகைப்படங்கள்!!
இந்தியா மற்றும் சீன நாட்டின் முன்னேற்றம் குறித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட இரு நாட்டு தலைவர்களும் சென்னை வருகை தந்தனர்.
இந்நிலையில் சென்னைக்கு வருகை தந்த சீனஅதிபர் ஜி ஜின்பிங்கை இந்திய பிரதமர் மோடி தமிழக கலாச்சார உடையான வேட்டி சட்டை அணிந்து வரவேற்றார். மேலும் அவர்கள்சென்னையில் பலத்த பாதுகாப்பும், ஏராளமான நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேலும் பிரதமர் மோடி மாமல்லபுரத்திற்கு வருகை தந்த சீன அதிபரிடம் அங்குள்ள சிற்பக் கலைகளை குறித்து விளக்கினார் எனவும் கூறப்படுகிறது. பின்னர் இருவரும் மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலை நிகழ்ச்சிகளையும் கண்டுகளித்தனர். மேலும் பல இடங்களில் இருவரும் ஒன்றாக புகைப்படம் எடுத்தனர்.
அதனை தொடர்ந்து சீன அதிபருக்கு பிரதமர் மோடி மிகவும் வித்தியாசமாக தமிழ்நாடு கைவினை பொருட்கள் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட நாச்சியார் கோவில் விளக்கு மற்றும் தஞ்சாவூர் ஓவியம் ஆகியவற்றை நினைவு பரிசாக வழங்கியுள்ளார்.மேலும் சீன அதிபரின் புகைப்படம் பதித்த பட்டு சால்வையும் பரிசாக அளித்துள்ளார்.