பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
திடீரென்று மூடிய மெட்ரோ ரயில் கதவுகள்.! இடுக்கில் மாட்டி 3 பயணிகள் காயம்.! தர்ணாவில் ஈடுபட்ட பயணிகள்.!
சென்னை உயர்நீதிமன்ற மெட்டோ ரயில்நிலையத்தில், நேற்று காலை பயணிகள் மெட்ரோ ரயிலில் ஏறும் பொழுது திடீரென ஆட்டோமேட்டிக் கதவுகள் மூடியுள்ளது. இதனால் கதவுகளுக்கு இடுக்கில் பெண் ஒருவர் தன் குழந்தையோடு நடுவில் மாட்டிக் கொண்டுள்ளார். இதனைப் பார்த்த சக பயணிகள், துரிதமாக செயல்பட்டு அப்பெண்ணை ரயில் பெட்டிக்குள் உடனடியாக இழுத்துள்ளனர்.
அதேபோன்று மேலும் 2 நபர்கள் கதவுகளுக்கு நடுவே மாட்டிக் கொண்டுள்ளனர். இதுகுறித்து ரயில் டிரைவரிடம் கேட்டதற்கு அலட்சியமாக பதில் கூறியதாக தெரிகிறது. அதிகாரிகள் சரியாக பதிலளிக்காததை கண்டித்து சக பயணிகள் ரயில் நிலையத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அங்கு தர்ணாவில் ஈடுபட்ட பயணிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் காயமடைந்த 3 பேரையும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, மெட்ரோ ரயில் நிலைய அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.