#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
குத்துச்சண்டையில் இறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்! ஷாக் ஆன பொதுமக்கள்!
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், குத்துச் சண்டை போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற சென்னையை சேர்ந்த மாணவியுடன் குத்துச்சண்டை போடுவது போல பாவனை செய்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் சென்னையை சேர்ந்த கலைவாணி என்ற மாணவி கலந்துகொண்டு, அரையிறுதியில் பிலிப்பைன்ஸ் வீராங்கனை ஜோசி அரைபேகாவை எதிர்கொண்ட தமிழக மாணவி வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளார்.
இந்தநிலையில் சென்னை ராயபுரத்தில் அந்த மாணவியை நேரில் சந்தித்து அமைச்சர் ஜெயக்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அந்த மாணவியுடன் குத்துச்சண்டை போடுது போல பாவனை செய்தார்.
அமைச்சர் ஜெயக்குமார் அந்த மாணவியிடம் கூறுகையில்,தானும் கல்லூரி படிக்கும்போது குத்துச்சண்டை வீரர் தான் என கூறினார். அமைச்சர் அங்கு செய்த பாவனைகள் அனைவரையும் சிரிக்க வைத்தது. ஆனாலும் அமைச்சர் இவ்வளுவு நகைச்சுவையாக மாணவியிடம் பேசுகிறாரே என பொதுமக்கள் ஷாக் ஆகினர்.