சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
அ.தி.மு.க-வில் பிளவு ஏற்படுமா.? அதிரடியாக அமைச்சர் ஜெயக்குமார் கொடுத்த விளக்கம்!
சென்னை ஓட்டேரி, நம்மாழ்வார்பேட்டையில் அ.தி.மு.க. சார்பில் வெங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்துகொண்டு பொதுமக்கள் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், கொரோனா நோய்த்தொற்று பரவாமல் இருப்பதற்கு தமிழக அரசு முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் அரசு வகுத்த வழிமுறைகளை கடைபிடித்துதான் நடத்தினோம். ஆனால் தி.மு.க. தலைவர் ஸ்டாலின், அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தை காரணம் காட்டி கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என்கிறார். தமிழகத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கின்றன. தற்போது உள்ள அபாய காலங்களில் கூட்டத்தை தவிர்ப்பதன் மூலம் நோய்த் தொற்றைத் தடுக்க முடியும் என்பதற்காக அரசு அந்த முடிவை எடுத்தது. ஆனால் எனக்கு சட்டம் கிடையாது என ஸ்டாலின் செயல்படுவது எப்படி ஜனநாயகத்தில் சரியாக இருக்கும் என்று கேள்வி எழுப்பினார். சட்டங்களை மதிப்பதுதான் சிறந்த எதிர்க்கட்சிகளின் கடமையாக இருக்க முடியும். சட்டத்தை மதிக்காமல் ஸ்டாலின் தடையை மீறி செயல்பட்டது குற்றம்தான் என தெரிவித்தார்.
வரும் 6-ந்தேதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டத்துக்கு வரவேண்டும் என்ற அழைக்கப்பட்டு இருப்பதாக வெளியான தகவல் தவறானது. அ.தி.மு.க.வில் குழப்பம் ஏற்படுத்தவே இதுபோன்ற வதந்திகளை பரப்பி வருகின்றனர். இதுபோன்ற வதந்திகளை பரப்பி விட்டு எதிரிகள் மற்றும் துரோகிகள் குளிர்காய நினைக்கிறார்கள். மக்களை பொறுத்தவரை மீண்டும் அதிமுக ஆட்சிதான் வேண்டும் என நினைக்கின்றனர். எனவே பூகம்பம் ஏற்பட்டாலும் ஏற்படலாம் ஆனால் அதிமுகவில் எந்த பிளவும் ஏற்படாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.