#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கணினி ஆசிரியர்கள் நியமனம் எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.
தமிழக உணவு துறை அமைச்சர் இரா.காமராஜின் சகோதரர் கனகசபை உடல்நல குறைவால் காலமானார். இதனை அடுத்து இறந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மன்னார்குடி அருகில் உள்ள பெருகவாழ்ந்தானில் இருக்கும் அமைச்சர் வீட்டிற்கு சென்றிருந்தார்.
இந்நிலையில் அங்கிருந்து நிருபர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன் 5 ஆம் வகுப்பு மற்றும் 8 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு என்பது மத்திய அரசின் முடிவு என்றும் தமிழகத்திற்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும் சமீபத்தில் நடந்த கணினி ஆசியர்கள் தேர்வு குறித்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதாகவும், தீர்ப்பு வந்தவுடன் விரைந்து கணினி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.