"மாணவிகளின் கல்வியை கெடுத்துறாதீங்க" - முதல்வர் முக ஸ்டாலின் கலங்கி, உருக்கமான பேச்சு.! 



MK Stalin on Girl Students Education at TN Assembly 


சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த 19 வயது மாணவி, ஞானசேகரன் (வயது 37) என்ற நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடந்து வருகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாணவிக்கு நேர்ந்த கொடுமை குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய வினாவுக்கு, தமிழ்நாடு முதல்வர் தனது பதிலையும் வழங்கினார். அப்போது, மாணவிகளின் படிப்பை அரசியல் இலாபத்திற்காக கேள்விக்குறியாக்கி விடாதீர்கள் என கோரிக்கை வைத்தார்.

மாணவர்களின் கல்வியை பாழாக்க வேண்டாம்

இதுதொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் பதிவு செய்துள்ள எக்ஸ் வலைப்பதிவு ட்விட்டரில், "பெண்களுக்கு எதிரான குற்றம் புரிவோர் சாமானியரா, கட்சி ஆதரவாளரா, காவல் ஆய்வாளரா, அதிகாரம் பொருந்தியவரா என்றெல்லாம் இந்த அரசு பார்க்காது... யாராக இருந்தாலும் கடுமையான, உச்சபட்ச தண்டைனையைச் சட்டப்படி பெற்றுத் தருவோம்!

இதையும் படிங்க: #Breaking: அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம்; முதல்வர் மு.க ஸ்டாலின் விளக்கம்.!

வாச்சாத்தி, தருமபுரி தொடங்கி பொள்ளாச்சி வரை சந்தி சிரித்த ஆட்சி நடத்திய கட்சியின் 'சார்கள்' பெண்கள் பாதுகாப்பு பற்றி எங்களுக்குப் பாடம் எடுக்க வேண்டாம்! சென்சிட்டிவான ஒரு வழக்கில், குறுகிய நோக்குடன் செயல்பட்டு, அரசியல் லாபத்துக்காக நம் மாணவர்களின் கல்வியைப் பாழாக்க வேண்டாம்!" என தெரிவித்து இருக்கிறார்.

 

இதையும் படிங்க: யுஜிசி நெட் தேர்வு தேதிகளை மாற்றுங்கள் - தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் கோரிக்கை.!