மே 24 ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு உள்ளதா.? உறுதியாக கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!



mk-stalin-talk-about-full-lock-down

தற்போது நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் மீண்டும் இரண்டாவது அலையாக தீவிரமாக பரவ துவங்கியுள்ளது. தமிழகத்தில் ஆரம்பத்தில் வேகமாக பரவிய கொரோனா தொற்று கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்த நிலையில் நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு மீண்டும் தீவிரமாக பரவ துவங்கியுள்ளது. 

கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருவதால், நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாளை முதல் முழு ஊரடங்கு அமலில் வரவுள்ளது. இந்த ஊரடங்கில் தேநீர் கடை, மளிகை கடை, இறைச்சி கடைகள் மட்டும் மதியம் 12 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள், போக்குவரத்துக்கு ஆகியவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

MK Stalinஇந்த நிலையில், தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிகர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிகர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்தும், தேவை குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில்  தமிழகத்தில் மே 24 ஆம் தேதிக்கு  பிறகு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தும் நிலை வராது என  ஆலோசனைக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி பட கூறினார்.