#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பேரறிவாளனுக்கு 30 நாள் சிறை விடுப்பு.! தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு.!
பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுப்பு வழங்கி தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் தற்போது புழல் சிறயைில் இருந்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள இருப்பதால் விடுப்பு வழங்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்தார்.
இந்தநிலையில், ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு 30 நாள் விடுப்பு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் வழங்கியுள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
திரு. பேரறிவாளனுக்கு மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் சிறை விடுப்பு அளிக்க வேண்டும் என அவரது தாயார் திருமதி @ArputhamAmmal அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தார்.
— M.K.Stalin (@mkstalin) May 19, 2021
அரசு அக்கோரிக்கையை கனிவோடு பரிசீலித்தது.
திரு. பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண சிறை விடுப்பு வழங்க ஆணையிட்டுள்ளேன்!
அவரது ட்விட்டர் பதிவில், "திரு. பேரறிவாளனுக்கு மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் சிறை விடுப்பு அளிக்க வேண்டும் என அவரது தாயார் திருமதி
அற்புதம்மாள் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தார். அரசு அக்கோரிக்கையை கனிவோடு பரிசீலித்தது. திரு. பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண சிறை விடுப்பு வழங்க ஆணையிட்டுள்ளேன்!" என தெரிவித்துள்ளார்.