#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வீடு புகுந்த மர்ம நபர்... கொலை செய்யப்பட்ட தாய் மற்றும் மகள்... தேடுதல் வேட்டையில் காவல்துறை.!
திண்டுக்கல் மாவட்டத்தில் வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் ஒன்று தாய் மற்றும் மகளை வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதனை தடுக்க வந்த மகளின் கணவருக்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் செட்டி நாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கள்ளிப்பட்டி அம்பேத்கர் காலணியில் வசித்து வருபவர் அய்யனார் இவரது மனைவி வள்ளியம்மாள் வயது 55. இந்த தம்பதியினருக்கு ராசாத்தி(32) என்ற மகள் இருந்தார் மேலும் ராசாத்தி என் கணவர் லட்சுமணன்(35) என்பவரும் இவர்களுடனே வசித்து வந்தார். லட்சுமணன் கள்ளிப்பட்டி அருகே உள்ள இரும்பு தொழிற்சாலையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு எட்டு மணி அளவில் வள்ளியம்மாள் அவரது மகள் ராசாத்தி மற்றும் மருமகன் லட்சுமணன் ஆகியோர் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது திடீரென வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்ப கும்பல் வள்ளியம்மாள் மற்றும் ராசாத்தியை பயங்கர ஆயுதங்களால் கொடூரமாக தாக்கியது. இதனை தடுக்க வந்த லட்சுமணனுக்கும் கத்தி குத்து விழுந்தது. அவர்களை கடுமையாக தாக்கி விட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இந்த தாக்குதலில் வள்ளியம்மாள் மற்றும் ராசாத்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இவர்களது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததோடு படுகாயம் அடைந்த லட்சுமணனை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் வள்ளியம்மாள் மற்றும் ராசாத்தி என் படுகொலை செய்யப்பட்டார்கள் இந்த படுகொலைக்கு முன்விரோதம் ஏதேனும் காரணம் உள்ளதா என்பது தொடர்பாக தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.