#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நான் மாடு மேய்க்க போறேன், மிஸ்ட்ட சொல்லிடுமா - சுட்டிப்பையனின் கியூட் வீடியோ வைரல்.!
வீட்டில் உள்ள செல்ல குழந்தைகளின் சுட்டித்தனமான செயல்கள் மற்றும் சேட்டைகளுக்கு என்றுமே பஞ்சம் இருக்காது. அவர்கள் தெரிவிக்கும் புகாரும், சிறுசிறு காரணமும் நம்மிடையே நகைப்பை ஏற்படுத்தினாலும், அவர்களுக்கு அது பெரிதான ஒன்று. அவர்களின் சுட்டித்தனம் நம்மை கட்டிப்போட வைக்கும்.
இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சிறுவனின் கியூட் வீடியோவில், சிறுவன் தனது தாயாரிடம் பள்ளிக்கு செல்லவில்லை என்று கண்ணீருடன் கூறுகிறார். இதுகுறித்த பதிவில் தாய் - மகன் இடையே நடந்த பேச்சுவார்தையானது..
சிறுவன்: மாடு மேய்க்க செல்கிறேன்
தாய்: ஏன் மாடு மேய்க்க செல்ல வேண்டும்? படிக்கவில்லையா?..
சிறுவன்: பள்ளி செல்ல பிடிக்கவில்லை. மாடு மேய்க்க செல்கிறேன்.
தாய்: எத்தனை மணிக்கு மாடு மேய்ப்பாய்?.
சிறுவன்: 5.30 மணிக்கு மாடு மேய்க்க செல்கிறேன்.
தாய்: மாட்டிற்கு என்ன போடுவாய்?.
சிறுவன்: இலை போடுவேன்.
தாய்: சரி மிஸ்ஸிடம் சொல்லிவிடு., நான் மாடு மேய்க்க செல்கிறேன் என்று..
சிறுவன்: நான் சொல்லவில்லை, மேடம் திட்டுவாங்க.. நீயே சொல்லிவிடு அம்மா..
தாய்: நானும் சொல்கிறேன், நீயும் சொல்லிவிடு..
சிறுவன்: நான் மாடுமேய்க்க செல்கிறேன், நீயே சொல்லிவிடு" என்பதுடன் உரையாடல் நிறைவு பெறுகிறது. இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ தமிழ்நாட்டின் எம்மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டது என்பது தொடர்பான பிற விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.