#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கணவனின் சடலத்தை உடனடியாக தகனம் செய்த மனைவி.. தாய் போலீசில் புகார்.!
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள இந்திராநகர் கிராமத்தை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் இராமலிங்கம். இவர் கடந்த நவம்பர் 30ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனிடையே பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் வரட்டாறு கால்வாய் அருகே உயிரிழந்து கிடைப்பதாக குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உறவினர்கள், ராமலிங்கத்தின் உடலை வீட்டுக்கு கொண்டு வந்து துக்கம் அனுசரித்தனர்.
மேலும் அவரது உடலில் பல வெட்டு காயங்கள் இருந்ததால், அவரது தாயாருக்கு மருமகள் மீது சந்தேகம் ஏற்பட்டது.இதனிடையே உடனடியாக ராமலிங்கத்தின் உடலை சுடுகாட்டில் புதைத்தனர். இதனையடுத்து உயிரிழந்தவரின் தாய் பிணத்தை தோண்டி பிரேத பரிசோதனை செய்ய வலியுறுத்தி புகார் அளித்துள்ளார். இதனை எடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.