#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மீண்டும் ஒரு அபிராமி! உல்லாசத்திற்கு இடையூறாக இருந்ததால் 3 வயது குழந்தைக்கு எமனாக மாறிய கொடூர தாய்.!
வேலூர் மாவட்டம், நாட்டறம்பள்ளியை அடுத்துள்ள வெள்ளநாயக்கனேரி பகுதியை சேர்ந்தவர் சந்தியா. இவர் திருப்பத்தூரில் தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார்.
சந்தியா, கடந்த 3 வருடங்களுக்கு முன்னதாக சரவணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 வயதில் ரோஷன் என்ற ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் சரவணன் வெளிநாட்டில் வேலை செய்து வந்ததால், சந்தியா தனது குழந்தையுடன் தனது தாயாரின் வீட்டில் இருந்து வந்துள்ளார்.இதனை தொடர்ந்து சமீபத்தில் படுக்கையில் குழந்தை ரோஷன் இறந்து கிடந்துள்ளார். இதனை கண்டு குடடும்பத்தார் மற்றும் சந்தியா கதறி அழுதுள்ளனர்.
பின்னர் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
அதாவது கணவன் வெளிநாட்டில் இருப்பதால் சந்தியாவிற்கு வேறு ஒரு வாலிபருடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.
மேலும் இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இந்நிலையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தனது குழந்தையை சந்தியா விஷ ஊசி போட்டு கொலை செய்துள்ளார். இதையடுத்து போலீஸார் சந்தியாவை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.