#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அதிர்ச்சி... ஏரியில் மிதந்த பச்சிளம்... பிறந்த 2 நாட்களில் தாய் செய்த கொடூரம்... வெளியான திடுக்கிட்டு உண்மை.!
சென்னை வேளச்சேரி அருகே ஏரிப் பகுதியில் பச்சிளம் குழந்தையின் சடலம் மிதந்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இது தொடர்பான காவல்துறையின் விசாரணையில் பல திடுக்கிடும் உண்மை சம்பவங்கள் வெளியாகி இருக்கிறது.
சென்னையில் வேளச்சேரியை அடுத்த ஏரி பகுதியில் பச்சிளம் குழந்தையின் உடல் மிதப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மை சம்பவங்கள் வெளியாகி இருக்கின்றன . முதல் கட்ட விசாரணையில் குழந்தை பிறந்து இரண்டு நாட்களே ஆனது தெரிய வந்திருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
அந்த வாக்கு மூலத்தில் குழந்தை தவறான உறவின் மூலம் கணவருக்கு தெரியாமல் பிறந்ததாகவும் அதனால் அந்த குழந்தையை ஏரியில் வீசி கொலை செய்ததாகவும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். பெற்ற தாயே பச்சிளம் குழந்தையை கொலை செய்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.