#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அதிர்ச்சி... பூட்டிய வீட்டிற்குள் துர்நாற்றம்... 6 மாதம் வீட்டிற்குள் முடங்கிய தாய், மகன்... நடந்தது என்ன.?
புதுச்சேரி மாநிலத்தைச் சார்ந்த பெண் ஒருவர் தனது மகனுடன் ஆறு மாதங்களாக பூட்டிய வீட்டிற்குள் வாழ்ந்து வந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் காவல்துறையிடம் புகார் அளித்ததை தொடர்ந்து அவர்களை மீட்ட காவல்துறையினர் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
புதுச்சேரி மாநிலம் ரெயின்போ நகர் பகுதியைச் சேர்ந்தவர் சசிகலா. இவர் தனது 11 வயது மகனுடன் வசித்து வருகிறார். இவர் கடும் மன உளைச்சலால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. தனது மன உளைச்சலை போக்குவதற்காக வீட்டில் நாய்கள் பூனைகள் மற்றும் பறவைகளை வளர்த்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களாக இவர்களது வீட்டில் எந்த நடமாட்டமும் இல்லை. அவ்வப்போது உணவை டெலிவரி செய்வதற்கு மட்டும் ஆட்கள் வந்து சென்று இருக்கின்றனர். மேலும் இவர்களது வீட்டிலிருந்து துர்நாற்றமும் வீசி இருக்கிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் குழந்தைகள் நல அமைப்புடன் இவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்த போது சசிகலா தனது மகன் மற்றும் செல்லப் பிராணிகளுடன் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்களை மீட்ட காவல்துறையினர் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட பிராணிகள் விலங்குகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.