பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
எமனாக வந்த ரயில்... மகள்களை காப்பாற்றி விட்டு தாய் பரிதாப பலி... கதறும் குடும்பத்தினர்...
சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை - சித்ரா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று சித்ரா தனது இரண்டு மகள்களையும் அழைத்துக் கொண்டு தியாகராய நகருக்கு பொருட்களை வாங்க சென்றுள்ளார். அங்கு பொருட்களை வாங்கி முடித்த பின் மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து கடற்கரை நோக்கி செல்லும் மின்சார ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அப்போது ரயிலானது சென்னை கோட்டை ரெயில் நிலையம் வந்ததும், ரெயிலில் இருந்து இறங்கிய சித்ரா மற்றும் அவரது மகள்கள் கடற்கரையிலிருந்து வேளச்சேரி செல்லும் மின்சார ரெயிலில் ஏறுவதற்காக தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் கடக்க முயன்ற தண்டவாளத்தில் எதிரே மின்சார ரயில் ஒன்று வேகமாக வந்துள்ளது. அதனை கண்ட அதிர்ச்சியடைந்த சித்ரா மற்றும் அவரது மகள்கள் வேகமாக கடக்க முயன்றுள்ளனர்.
ஆனால் ரயில் வேகமாக வந்ததை அடுத்து சித்ரா தனது மகள்கள் இரண்டு பேரையும் வேகமாக தண்டவாளத்திலிருந்து வெளியே தள்ளி விட்டு தானும் கடக்க முயன்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.