#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
திருச்சியில் ஷாக்கிங்.!! ஸ்ரீரங்கம் கல்லூரி மாணவி சாவில் மர்மம்.!! காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா.?
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து பலியான சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்டாரா.? அல்லது கீழே தள்ளிவிட்டு படுகொலை செய்யப்பட்டாரா.? என்பது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி அருகே உள்ள ஸ்ரீரங்கம் வசந்த் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபி. இவரது மகள் ஜெயஸ்ரீ. 19 வயதான ஜெயஸ்ரீ திருச்சியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். ஜெயஸ்ரீயும் ஸ்ரீரங்கம் கீழ சித்திரை வீதியில் வசிக்கும் கிஷோர்(23) என்பவரும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் தனது காதலனை சந்தித்து பேசுவதற்காக ஸ்ரீரங்கம் வடக்கு சித்திரை வீதியில் உள்ள கிஷோரின் நண்பர் ஸ்ரீராம் வீட்டிற்கு ஜெயஸ்ரீ வந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து வீட்டின் மாடியில் வைத்து ஜெய் ஸ்ரீ மற்றும் கிஷோர் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ஜெயஸ்ரீ தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கிஷோரிடம் வற்புறுத்தியதாக தெரிகிறது. இதற்கு கிஷோர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் விரக்தி அடைந்த ஜெயஸ்ரீ வீட்டின் மாடியில் இருந்து குதித்து இருக்கிறார். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் வரும் வழியிலேயே ஜெயஸ்ரீ இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவத்தில் ஜெயஸ்ரீ மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரா.? அல்லது மாடியில் இருந்து கீழே தள்ளி விடப்பட்டு கொலை செய்யப்பட்டாரா.? என்பது தொடர்பாக ஜெயஸ்ரீயின் காதலன் கிஷோர் மற்றும் உடன் இருந்த நண்பர்களான ஸ்ரீராம் ராகுல் மற்றும் ரிஷி ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.