தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
22 வயது இளம்பெண்ணுடன் கள்ளக்காதல்.. பாஜக நிர்வாகி படுகொலை.. ஈரோட்டில் கடத்தி நெல்லையில் சம்பவம்.!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முன்னீர்பள்ளம், கண்டித்தான்குளம் மூகாம்பிகை நகரில் உள்ள வெள்ளநீர் கால்வாயில், நேற்று முன்தினம் அழுகிய நிலையில் 37 வயதுள்ள வாலிபரின் சடலம் மிதந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த முன்னீர்பள்ளம் காவல் துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த வாலிபரின் உடலில் வெட்டுக்காயங்கள் இருந்த நிலையில், கொலை செய்து அவரை கல்லைக்கட்டி கால்வாயில் வீசியதும் அம்பலமானது. விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம், அக்கமநாயக்கனூர் பகுதியில் வசித்து வரும் செந்தில்குமார் (வயது 37) என்பது உறுதியானது. இவர் பாஜக வர்த்தக அணியின் துணைத்தலைவராக பொறுப்பில் இருந்த நிலையில், சொகுசு கார் ட்ராவல் நிறுவனம் நடத்தியும் வந்துள்ளார்.
இவருக்கு திருமணம் முடிந்து தனலட்சுமி என்ற மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். செந்திலுக்கு முகநூல் மூலமாக ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணின் பழக்கம் ஏற்படவே, கடந்த 10 மாதமாக இருவரும் பழகி வந்துள்ளனர். மேலும், அவ்வப்போது நேரில் சந்தித்து பேசி வந்துள்ளனர். இந்த தகவலை அறிந்த இளம்பெண்ணின் உறவினர்கள் செந்திலை கண்டிக்க, அவர் அதனை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.
இதனால் செந்திலை கொலை செய்ய திட்டமிட்ட பெண்ணின் உறவினர்கள், கடந்த 14 ஆம் தேதி ஈரோட்டில் இருந்த விடுதியில் தங்கியிருந்து செந்திலுக்கு தொடர்பு கொண்டு, நெல்லைக்கு செல்ல வாடகைக்கு கார் வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனை நம்பிய செந்திலும், சவாரிக்காக திருநெல்வேலி செல்கிறேன் என மனைவியிடம் கூறிவிட்டு புறப்பட்டு சென்றுள்ளார். ஈரோட்டில் பெண்ணின் உறவினர்களான 5 பேரை ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சென்ற நிலையில், செந்தில்குமாரின் உதவியாளர் சீனிவாசன் எனபவரும் வழியில் காரில் பயணம் செய்துள்ளார்.
சீனிவாசனை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கயத்தாறு நான்குவழிச்சாலையில் திடீரென பயங்கர ஆயுதத்தால் சீனிவாசனை தாக்கிய கும்பல், அவரை அங்கேயே இறக்கிவிட்டு சென்றுள்ளது. பின்னர், செந்தில் குமாரை முன்னீர்பள்ளம் கண்டித்தான்குளம் வெள்ளநீர் கால்வாய்க்கு கடத்தி சென்று கழுத்தை நெரித்து, அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளது. பின்னர், உடலை கல்லைக்கட்டி கால்வாயில் வீசி தப்பி சென்று, காரின் நம்பர் பிளேட்டையும் மாற்றி ஈரோட்டில் மறைத்து வைத்துள்ளனர்.
சீனிவாசன் கொடுத்த தகவலின் பேரில், ஈரோடு காவல் நிலையத்தில் செந்தில் குமாரின் மனைவி புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில், உடல் அடையாளம் காண செந்தில்குமாரின் மனைவி தனலட்சுமியை நெல்லை அழைத்து வந்த காவல் துறையினர், அது செந்தில் குமாரின் சடலம் என்பதை உறுதி செய்தனர். இதனைத்தொடர்ந்து, செந்தில் குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விஷயம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், தலைமறைவாகியுள்ள கும்பலுக்கு வலைவீசப்பட்டுள்ளது.