பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
குடிகார கணவனால் மனைவிக்கு நேர்ந்த சோகம்.. வாழ்க்கையில் விரக்தியடைந்து பெண் எடுத்த முடிவால் பறிபோன உயிர்.!
தனது கணவரின் மதுபோதை பழக்கத்தால் வாழ்க்கையில் விரக்தியடைந்த பெண்மணி தற்கொலை செய்துகொண்டார்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்திவேலூர், பொத்தனூர் பகுதியில் வசித்து வருபவர் தியாகராஜன் (வயது 32). இவர் மேஸ்திரியாக பணியாற்றி வருகிறார். தியாகராஜனின் மனைவி மீனாட்சி (வயது 25). தம்பதிகளுக்கு 4 வயதில் விஷ்ணு என்ற மகனும், கனிஷ்கா என்ற இரண்டரை வயது மகளும் இருக்கின்றனர்.
தியாகராஜன் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததால், தினமும் வீட்டிற்கு குடித்துவிட்டு வருவது வழக்கம். இதனால் தம்பதியிடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்றும் அதனைப்போல இருவருக்குள்ளும் அதிகளவில் தகராறு நடந்துள்ளது.
இதனால் வாழ்க்கை மீது விரக்தியடைந்த மீனாட்சி 21 ம் தேதி வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். அக்கம் பக்கத்தினர் மீனாட்சியை மீட்டு கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். அங்கிருந்து கரூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்த மீனாட்சி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த பரமத்திவேலூர் காவல் துறையினர், மீனாட்சியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.