"கள்ளத்தொடர்பை கைவிட மறுத்ததால் ஆத்திரம்..." மனைவியின் தலையில் கல்லைப் போட்டு காலி செய்த கணவர்.!



near-namakkal-husband-brutally-murder-his-wife-because

நாமக்கல் மாவட்டத்தில் கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த மனைவியின் தலையில் கணவன் கல்லைப் போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி மாரியப்பன் வயது 61. இவருக்கு சரசு என்ற பெண்ணுடன் திருமணமாகி இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக தனது முதல் மனைவியை பிரிந்த மாரியப்பன் சின்னப்பொண்ணு(58) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

tamilnadu

இந்நிலையில் சின்ன பொண்ணுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த  வேறொரு நபருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்திருக்கிறது. இதனை மாரியப்பன் கண்டித்து வந்த நிலையில் அவர் கள்ளத்தொடர்பை கைவிட மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மாரியப்பன் நேற்று அதிகாலை மனைவி தூங்கிக் கொண்டிருக்கும்போது  அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்து இருக்கிறார்.

இதில் சம்பவ இடத்திலேயே சின்ன பொண்ணு பரிதாபமாக உயிர் இழந்தார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் மனைவியை கொலை செய்த மாரியப்பனையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.