#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
திருமணமாகி 40 நாட்களுக்குள் புதுப்பெண் தீ குளித்து தற்கொலை... ஆர்டிஓ விசாரணை.!
சாத்தூர் அருகே இளம் பெண் தீ குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேவுள்ள பெரிய கொல்லப்பட்டியைச் சேர்ந்த சக்கையா மற்றும் பேச்சியம்மாள் தம்பதியின் மகள்பிரியா (21). இவருக்கும் அவர்களது உறவினரான செல்வ பாண்டியன்(24) என்பவருக்கும் கடந்த 40 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
செல்வ பாண்டியன் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை வீட்டிலிருந்து அனைவரும் வேலைக்குச் சென்ற நிலையில் தனியாக இருந்த பிரியா திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து அவரைக் காப்பாற்றும் என்றனர்.
ஆனாலும் பரிதாபமாக தீயில் கருகி உயிரிழந்தார் பிரியா. இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்த பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். திருமணமான 40 நாட்களிலேயே புதுப்பெண் தற்கொலை செய்திருப்பதால் கோட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.