#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கொடூரம்... கள்ளக் காதலுக்காக உடல் நலம் சரியில்லாத கணவரின் மீது சுடுதண்ணீர் ஊற்றிக் கொல்ல முயற்சி... மனைவி கைது.!
திருச்சி அருகே கள்ளத்தொடர்பை தட்டி கேட்ட கணவர் மீது மனைவி சுடு தண்ணீரை ஊற்றி கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது இது தொடர்பாக அந்தப் பெண் கைது செய்யப்பட்டு அவரிடம் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.
திருச்சி அருகே பெட்டவாய்த்தலை பனங்காவிரி பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலு என்ற மகாமுனி. 55 வயதான இவர் லாரி டிரைவராக பணியாற்றி வந்த நிலையில் பக்கவாதம் தாக்கியதால் கை கால்கள் செயலிழந்து தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் . இவரது மனைவி உஷா வயது 37. இந்த தம்பதிக்கு 15 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.
இந்நிலையில் உஷாவிற்கு வேறொரு நற்பருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை மகாமுனி கண்டித்து வந்திருக்கிறார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பவம் நடந்த தினத்தன்று கள்ளத்தொடர்பு விவகாரம் தொடர்பாக மகாமுனி மற்றும் விவசாய இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது.
தனது கணவர் மகாமுனி மீது கோபம் தீராத நிலையில் அதிகாலை எழுந்த உஷா சுடு தண்ணீர் வைத்து அதனை எடுத்து அவரது கணவரின் இடுப்பு பகுதியில் ஊற்றி இருக்கிறார். இதனால் அந்த பகுதி முழுவதும் வெந்து இருக்கிறது. வலி தாங்க முடியாமல் அலறிய அவரது சத்தம் கேட்டு வந்தா அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மகாமுனிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவும் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சாவை கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.