#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆடிமாதத்திற்கு தாய் வீட்டிற்கு சென்ற மனைவி.! மனைவியின் துப்பட்டாவில் தூக்கில் தொங்கிய புது மாப்பிளை.!
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அடுத்துள்ள பெருமாள் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கும், வீரமங்கலம் கிராமத்தை சேர்ந்த நிஷா என்ற பெண்ணிற்கும் கடந்த மாதம் நடந்துள்ளது. தற்போது ஆடி மாதம் என்பதால் நிஷாவை அவருடைய பெற்றோர் வீரமங்கலத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு மனைவியின் வீட்டிற்கு சுரேஷ் சென்றுள்ளார். இந்நிலையில், நிஷா வீட்டின் பின்புறம் உள்ள ஒரு மரத்தில் தனது மனைவியின் துப்பட்டாவில் சுரேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுரேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில், சுரேஷின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சுரேஷின் உறவினர்களிடம் பேசிக்குவார்த்தை நடத்தி, இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என்று கூறி அவர்களை சமாதான படுத்தினர். இதனால் அறந்தாங்கி மருத்துவமனை சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.