பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
நான் ஏன் தமிழ் பேசுவதில்லை? தலைமறைவு நித்யானந்தா விளக்கம்!
சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் சுவாமி நித்யானந்தா. இவர் பெயரில் பலவிதமான வழக்குகள் இருந்து வருகின்றன. அதிலும் சில வழக்குகள் வெகுநாட்களாக நிலுவையில் இருந்து வருகின்றன. இவர் மீது பாலியல் குற்றச்சாட்டு வழக்கு மற்றும் குழந்தைகள் கடத்தல் வழக்கு போன்ற பல வழக்குகள் கூறப்பட்டு வருகின்றன.
சமீபத்தில் கூட பெங்களூர் ஆசிரமத்தில் இருந்து 2 குழந்தைகளை கடத்தி வந்து அகமதாபாத்தில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. அதனையடுத்து அங்கு செய்து சோதனை செய்துள்ளனர் காவல்துறையினர். அப்போது அங்கு குழந்தைகள் இருப்பதையும் கண்டுபிடித்துள்ளனர். அதன் பிறகு அவர்களை பத்திரமாக மீட்டுள்ளனர். மேலும் அங்கே இருந்த இரண்டு நித்தியானந்தா சீடர்களையும் கைது செய்துள்ளனர்.
தற்போது தலைமறைவாகி உள்ள நித்யானந்தாவை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் தற்போது நித்யானந்தாவை வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதில் நித்தியானந்தா முதலில் ஆங்கிலத்தில் பேசியவர் அதனைத்தொடர்ந்து தமிழில் பேசியுள்ளார்.
தமிழ்ல பேசினாலே ஏதாவது தகராறு பண்றாங்க. எதையாவது நான் சொல்லி வச்சிடறேன். இவங்களுக்கு தமிழும் புரியமாட்டேங்குது புரியல நாளும் சும்மா இருக்க மாட்டேங்குறாங்க மூல லிங்கத்துக்கு மூலவர் லிங்கத்துக்கு வித்தியாசம் தெரிய மாட்டேங்குது. உடனே ஏதாவது கேஸ் பைல் பண்ணுறாங்க அதற்கு ஆண்டிசிபட்ரி பைல் வாங்கி ஓடறதுக்கே டைம் சரியா இருக்கும் என நக்கலாக கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ.