"எல்லாமே ப்ரீ, கைலாஸாவில் பணத்திற்கு மதிப்பில்லை" - நித்யானந்தா திகீர்.!



Nithyananda about Kailasa Location and No Tax in Kailasa Region 

 

இந்திய அரசு சார்பில் ரெட் கார்னர் நோட்டிஸ் பிறப்பிக்கப்பட்ட சர்ச்சை சாமியார் நித்தியானந்தா, கைலாஸா என்ற தனி தீவை வாங்கி அதனை நாடாக அறிவித்துக்கொண்டார். அங்கிருந்தவாறு இணையவழியில் தனது பக்தர்களிடையே உரையாற்றும் வருகிறார். 

கைலாஸா எங்கிருக்கிறது என கூறுகிறேன்

தனது நாட்டிற்கு என தனியாக முத்திரை நாணயம், பாஸ்போர்ட் போன்றவையும் வெளியிட்டு இருந்தார். தற்போது வரை இவரை இந்திய அரசு தேடி வருகிறது. இந்நிலையில், நித்தியானந்தா கைலாஸா நாடு குறித்து அறிவிப்பதாக தெரிவித்துள்ளார். 

இதுகுறித்த அறிவிப்பில், எங்களின் கைலாஸா நாட்டில் பணத்திற்கு மதிப்பு இல்லை. உணவு, கல்வி, மருத்துவம் போன்றவை இலவசம். கைலாஸாவில் நீங்கள் எவ்வுளவு நாட்கள் வேண்டுமானாலும் தங்கலாம். மக்களுக்கு எவ்வித வரிகளும் இல்லை. எமது அரசின் சட்டங்கள் மாற்றம் செய்யப்படாது. நாளை கைலாஸாவின் இருப்பிடம் குறித்து அறிவிக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.