வானிலை ஆய்வு மையம் புதிய தகவல்.! நாளை அதிகாலை வரை நிவர் புயல் கரையை கடக்கும்.!



Nivar Cyclone update

வங்கக்கடலில் உருவாகி தீவிர புயலாக மாறியுள்ள ‛நிவர்' இன்று இரவு கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்தநிலையில்  இந்த புயல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தீவிர புயலாக உள்ள நிவர் புயல் அடுத்த 12 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக வலுப்பெற்று காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் கரையை கடக்கும் என்றும் புயலின் தாக்கம் இன்றிரவு முதல் அதிகரிக்கும் என்றும், சென்னையில் இருந்து 350 கி.மீ., தொலைவிலும் நிவர் புயல் மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த புயலானது அதிதீவிர புயலாக மாறி காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே இன்று இரவு முதல் நாளை அதிகாலை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 130 முதல் 140 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு இருப்பதாகவும், காற்றின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 155 கிலோமீட்டர் வரை எட்டக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.