#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தமிழகத்தில் நாளை சனிக்கிழமை முழு ஊரடங்கா.? வெளியான முக்கிய தகவல்.!
இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் இரண்டாவது அலையாக அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும், கொரோனா பரவல் தீவிரமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வேகமெடுத்துவருவதால் மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க மே 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை முன்னிட்டும், மே 1 மற்றும் 2-ஆம் தேதிகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்க சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்திருந்தது. இந்தநிலையில், தமிழகத்தில் மே 1-ஆம் தேதி சனிக்கிழமை முழு ஊரடங்கு அவசியமில்லை என்றும், 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று ஏற்கனவே முழு ஊரடங்கு அமலில் இருப்பதாகவும் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தொழிலாளர் தினத்துக்கு பொது விடுமுறை என்பதால், மே 1-ஆம் தேதி சனிக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், அன்றைய தினம் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் தொடங்குவதால், முழு ஊரடங்கு பிறப்பிக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு என்ற நடைமுறை மறு உத்தரவு வரும் வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு இன்று அறிவித்துள்ளது.