#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வடகிழக்கு பருவமழை தொடங்கும் தேதியை வெளியிட்ட சென்னை வானிலை மையம்!!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், ஒருசில இடங்களில் கனமழை முதல், மிதமான மழை வரை அவ்வப்போது தலைகாட்டி வருகிறது.
இதனால், ஒருசில இடங்களில் பெய்து வரும் மழையினால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில், இந்த மழையின் வருகையானது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், அக்டோபர் 3வது வாரத்துக்கு பிறகு தான் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து, தென்மேற்கு பருவமழையானது செப்டம்பர் 25 ஆம் தேதி அன்று ராஜஸ்தானில் முடிகிறது; 30 நாட்களில் நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை முற்றுபெற உள்ளது.