#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
திருப்பூரில் மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருந்த... வட மாநில இளைஞரை; கத்தியால் குத்திக் கொன்ற கணவன்...!!
தன் மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருந்த பீகார் மாநில இளைஞரை சரமாரியாக வெட்டி கொன்று விட்டு தப்பியோடிய ஜார்க்கண்ட் மாநில தொழிலாளியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருப்பூர் நெசவாளர் காலனியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த பவன் யாதவ் என்பவர் குடும்பத்துடன் தங்கி பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். அதே நெசவாளர் காலனி பகுதியில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த உபேந்தரதாரியும் குடும்பத்துடன் தங்கி ஓட்டுநராக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் பவன் யாதவிற்கு, உபேந்தரதாரி மனைவி சித்ராதேவியுடன் கள்ளத் தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்த விஷயம் உபேந்தரதாரிக்கு தெரிந்தவுடன். இது குறித்து நேரடியாக பவன் யாதவிடம் கேட்டு விடலாம் என நினைத்த உபேந்தரதாரி, நேற்று இரவு பவன் யாதவ் வீட்டிற்கு சென்று இது குறித்து பேசி உள்ளார்.
சிறிது நேரத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது கை கலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த உபேந்தரதாரி, அவர் கையில் வைத்திருந்த அரிவாளால் பவன் யாதவை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியுள்ளார்.
இதில், பலத்த காயமடைந்த பவன் யாதவை பக்கத்தில் உள்ளவர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பவன் யாதவ் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து , பவன் யாதவ்வை வெட்டி விட்டு தப்பியோடிய உபேந்தரதாரியை தீவிரமாக தேடி வருகின்றனர்.