#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தனியார் கல்லூரியின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த நர்சிங் மாணவி.. மரணத்தில் சந்தேகம் ..!!
ஒட்டன்சத்திரம் தனியார் கல்லூரியில் படிக்கும் நர்சிங் மாணவி, மூன்றாவது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் வட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள தனியார் கல்லூரியில், பழைய பட்டியை சேர்ந்த மாணவி ஒருவர் விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார்.
திடீரென, இந்த மாணவி கல்லூரியின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாணவியை கல்லூரி நிர்வாகம் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி நேற்று உயிரிழந்தார். இது தொடர்ந்து மாணவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.