#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடக்கடவுளே! சாப்பிட வந்த இடத்தில் நேர்ந்த அசம்பாவிதம்.. சுக்குநூறாய் போன சொகுசு கார்..!
சென்னை போயஸ் கார்டனில் உள்ள பிரபலமான ஒரு உணவகத்திற்கு நேற்று இரவு வாடிக்கையாளர் ஒருவர் சாப்பிடுவதற்காக தனது சொகுசு காரில் வந்தநிலையில் அந்த உணவகத்தின் ஊழியர் காளிராஜ் என்பவர் காரை பார்க்கிங் செய்வதாக கூறி கத்தீட்ரல் சாலைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
அப்போது காளிராஜ் சொகுசு காரை அதிவேகமாக இயக்கியதால் சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவர் மீது அதிபயங்கரமாக மோதியது. இதில் அந்த சொகுசு காரானது அப்பளம் போல் நொறுங்கியது. இந்த சம்பவத்தில் காரை ஓட்டிய காளிராஜ் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
மேலும் வாகன நெரிசல் அதிகமாக இல்லாததால் பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து தகவல் அறிந்து வந்த போக்குவரத்து காவல்துறையினர் காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.