#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வயல்வெளியில் இரவு தங்கிய தம்பதி.! சமைப்பதற்கு அடுப்பு தயார் செய்ய கல்லை எடுத்த போது காத்திருந்த பேரதிர்ச்சி.!
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரியவளையம் மேல தெருவை சேர்ந்தவர்ராயர் (65). இவரது மனைவி சிந்தாமணி (58). இவர்கள் இருவரும் விவசாய கூலித்தொழிலாளிகள். இந்தநிலையில் இவர்கள் இருவரும் சிலால் கிராமத்தில் உள்ள அன்பழகன் என்பவரின் கடலை வயலில் கடலை அறுவடைப் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்தநிலையில், சம்பவத்தன்று இருவரும் இரவு நேரமாகி விட்டதால் வயலிலேயே தங்கி மறுநாள் காலை தொடர்ந்து வேலை செய்யலாம் என்று முடிவு செய்து வயலிலேயே தங்கியுள்ளனர். இதனையடுத்து இரவு உணவு சமைப்பதற்காக அடுப்பு தயார் செய்ய ராயரின் மனைவி சிந்தாமணி வயல்வெளியில் இருந்த கல்லை எடுத்துள்ளார். அப்போது கல்லுக்கு கீழே இருந்த பாம்பு சிந்தாமணியை கடித்துள்ளது.
இதனையடுத்து பாதஹரிபோன ராயர் தனது மனைவியை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சிந்தாமணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.