குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
குதிரையின் வாலைப்பிடித்து இழுத்த விளையாட்டு.. எட்டி உதைத்ததில் 4 வயது சிறுவன் பரிதாப மரணம்.. பெற்றோர்களே கவனம்.!
பல்லாவரம் பகுதியில் மேய்ச்சலுக்காக குதிரை அழைத்து செல்லப்படுகையில், குதிரையின் வாலை பிடித்து இழுத்த சிறுவன் பரிதாபமாக குதிரையிடம் மிதிபட்டு உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள பல்லாவரம், பம்மல் சங்கர் நகரில் வசித்து வருபவர் டெல்லி ராஜா. இவர் கால் டாக்சி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரின் மகன் கெளதம் (வயது 4).
நேற்று இரவில் சிறுவன் கெளதம் வீட்டின் வாசலில் நின்று விளையாடிக்கொண்டு இருந்த நிலையில், குதிரைகள் மேய்ச்சலுக்காக ஒன்றன் பின் ஒன்றாக சென்றுள்ளது. அப்போது, சிறுவன் குதிரையொன்றின் வாலை பிடித்து இழுத்துள்ளான்.
இதனால் ஆத்திரமடைந்த குதிரை சிறுவனை எட்டி உதைக்கவே, படுகாயமடைந்த சிறுவன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டான். ஆனால், அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் இறந்துவிட்டதை உறுதி செய்தனர்.
மகன் இறந்ததை அறிந்த பெற்றோர் உடலை கட்டியணைத்து கதறியழுதது காண்போரை சோகத்திற்கு உள்ளாக்கியது. இந்த விஷயம் தொடர்பாக சங்கர் நகர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.