#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நீண்ட காலமாக சரி செய்யப்படாத பள்ளம்.. மெட்ரோ வாட்டர் அதிகாரிகளுக்கு மக்கள் கோரிக்கை..!
சென்னை, பாடி அருகே 88வது வார்டுக்கு உட்பட்ட மகாத்மா காந்தி மெயின் ரோட்டில் பல மாதங்களுக்கு முன்பு திடீரென்று பள்ளம் ஏற்பட்டது. அப்போது மக்கள் பீதியடைந்தனர். அதை அரசு அதிகாரிகள் வந்து ஆய்வு செய்ததில் பாதாள கால்வாய் மற்றும் மெட்ரோ வாட்டர் இணைப்பில் கசிவு ஏற்படுவதால் பள்ளம் ஏற்பட்டது என்று கூறியுள்ளனர்.
அப்போது முதல் இந்த பள்ளத்தை சரி செய்ய தொடங்கிய பணிகள் இன்றுவரை முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் செல்லும் அரசு மினி பேருந்துகள் மாற்று வழியில் சென்று கொண்டிருக்கிறது.
மற்ற வாகனங்களும் அந்த வழியாக செல்லமுடியாமல் மாற்றுப் பாதையில் சென்று வருகின்றன. அவசரமாக செல்லும் 108 வாகனம் செல்வதற்கு கூட வழி இல்லாமல் சுற்றி செல்ல வேண்டிய அவல நிலை இருக்கிறது . இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
உடனடியாக சம்பந்தப்பட்ட சென்னை மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து விரைந்து இந்த பள்ளத்தை சீர்செய்து வாகனங்கள் இந்த வழியாக செல்ல வழி ஏற்படுத்தி தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.