பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட கூலித்தொழிலாளி: பெற்றோர் வீட்டில் நடந்த சோகம்.!
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செஞ்சேரி, செட்டிகுளம் பிரிவு பகுதியைச் சார்ந்தவர் மஞ்சுநாதன் (வயது 39). இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
தனது குழந்தைகளுடன் ஈச்சம்பட்டியில் இருக்கும் பெற்றோரின் வீட்டில் தங்கியிருக்கிறார். இந்நிலையில், நேற்று இரவு நேரத்தில் திடீரென மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மஞ்சுநாதன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்த மஞ்சுநாதன், எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்ற விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.