#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"Shutdown Alert" : நாளை பெரம்பலூர் மாவட்டத்தில் மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள்.!
தமிழகம் முழுவதும் மின்சார பராமரிப்பு பணி காரணமாக குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் காலை முதல் மாலை வரை மின்தடை முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு பணிகளை மின்சாரத்துறை மேற்கொண்டு வருகின்றது. ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்த மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும்.
அன்றைய தினம் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு விடும் என்பதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் முன்னேற்பாடுகளை செய்து கொள்வார்கள். கீழ்க்காணும் இந்த பகுதியில் வசிக்கின்ற மக்கள் முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
அந்த வகையில், நாளை பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் நடைபெற உள்ள மின் பராமரிப்பு பணி காரணமாக பெரம்பலூர் நகர பகுதிகளான பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், துறைமங்கலம், மதனகோபாலபுரம், நான்கு ரோடு, மின் நகர், அருமடல் பிரிவு சாலை, அறனாரை, பாலக்கரை, மாவட்ட அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக மின்சார துறை அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.