"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
கொரோனா சமயத்தில் அசுர வேகத்தில் உயரும் பெட்ரோல், டீசல் விலை! அதிர்ச்சியில் பொதுமக்கள்!
கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை மாதம் இரண்டு முறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்தது. சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது. இதனால் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் மாற்றங்களை சந்தித்து வருகிறது. ஊரடங்கு சமயத்தில், இந்த மாதத்தில் மட்டும் 21 முறையாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது.
சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 22 காசுகள் உயர்ந்து 83 ரூபாய் 59 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று, டீசல் விலை லிட்டருக்கு 17 காசுகள் உயர்ந்து 77 ரூபாய் 61 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.