பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
பெண்களுக்கு தனியாக தெரியும் வகையில் பிங்க் நிற பஸ்... உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்..!
கட்டணமில்லா பயணத்தை அடையாளப்படுத்தும் வகையில் சென்னையில் ‘பிங்க்’ நிற பேருந்து சேவையை உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
சென்னை, தமிழகத்தில் சாதாரண அரசு பேருந்துகளில், 'வெள்ளை நிற போர்டு' பெண்கள் கட்டணம் செலுத்தாமல் பயணிக்கும் வசதி அமலில் இருக்கிறது. ஆனால் அவசரத்தில் மற்றும் தெரியாமலும், சில பெண்கள் டீலக்ஸ், சொகுசு பேருந்துகளில் ஏறி விடுகின்றனர். இந்த குழப்பத்தை போக்கும் வகையில் பெண்கள் கண்டனம் இல்லாமல் பயணிக்கும், சாதாரண கட்டண பஸ்சின் நிறத்தை 'பிங்க்' நிறத்தில், போக்குவரத்து துறை மாற்றம் செய்தது.
இந்நிலையில் 'பிங்க்' நிற பேருந்துகள் இயக்கத்தை, சென்னை மெரினா கடற்கரையில் இருக்கும் தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய அலுவலகம் அருகில் இன்று நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
மேலும் அவர், ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனை, மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தில் இருந்து மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு ஐந்து இணைப்பு மினி பேருந்து இயக்கத்தையும் கொடி அசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.