#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கில் ஜெயக்குமார் பற்றி துப்பு கொடுத்தால் தக்க சன்மானம்!
குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக இடைத்தரகர்கள், அரசு ஊழியர்கள் உட்பட இதுவரை 14 பேர் கைதாகியுள்ளனர். முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 தேர்வர்கள் வாழ்நாள் முழுவதும் அரசுப்பணிக்கான தேர்வெழுத தடை விதிக்கப்பட்டிருப்பதோடு, அரசு ஊழியர்கள் மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான இடைத்தரகர் ஜெயக்குமாரின் வீட்டில் சோதனை செய்யப்பட்டது. சென்னை முகப்பேரில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இடைத்தரகர் ஜெயக்குமாரின் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அதிகாரிகளால் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஜெயக்குமார் வெளிநாடு தப்பிச்செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் முன்னெச்சரிக்கை செய்யப்பட்டுள்ளன.
மேலும், ஜெயக்குமார் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று சிபிசிஐடி போலீசார் அறிவித்துள்ளனர். அவரது புகைப்படம் அச்சிடப்பட்டு மாநிலம் முழுவதும் ஒட்டப்பட்டு தகவல் கொடுப்பதற்கு தொலைபேசி எண்களும் அறிவித்துள்ளனர்.