சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் திடீர் திருப்பம்.! அடுத்தடுத்து அப்ரூவராகும் போலீசார்!



Police approver in sathankulam case

காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட சாத்தான்குளம் ஜெயராஜ், காவல்துறையினரின் தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் லாக்கப் மரணம் குறித்த வழக்கு தற்போது விறுவிறுப்பு அடைந்துள்ளது. இந்த வழக்கு நேற்று முதல் சிபிசிஐடி வசம் வந்த பிறகு அதிரடியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

sathankulam issue

இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த சிபிசிஐடி போலீசார் 4 காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் எஸ்.ஐ. ரகு கணேஷ் கைது செய்யப்ட்டார். இதையடுத்து எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், காவலர் முத்துராஜ் தலைமறைவாக இருந்தனர். இவர்களை தீவிரமாக தேடிவந்த சிபிசிஐடி போலீசார் இவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். சாத்தான் வழக்கில் 5 காவலர்களை இதுவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். 

இந்த வழக்கில் ஏற்கனவே தலைமை காவலர் ரேவதி அப்ரூவராக மாறிய நிலையில் சிபிசிஐடி விசாரணையில் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டு உள்ளது.  சிறப்பு எஸ்.ஐ. பால்துரை மற்றும் காவலர் முத்துராஜ் ஆகியோர் சிபிசிஐடி தரப்பு சாட்சிகளாக மாறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.