#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஒடிசாவில் இருந்து தாம்பரத்திற்கு கஞ்சா சப்ளை.... கேரளா இளைஞர் கைது.!
ஒடிசா மாநிலத்தில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு கடத்தி வரை இருந்த கஞ்சா காவல்துறையின் துரித நடவடிக்கையால் தடுக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக கேரள மாநிலத்தைச் சார்ந்த ஒருவரை காவல் துறை கைது செய்துள்ளது.
தாம்பரம் மதுவிலக்கு காவல் ஆய்வாளருக்கு ஒடிசாவிலிருந்து தாம்பரத்திற்கு ரயில் மூலம் கஞ்சா கடத்தி வரப்படுவதாக தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர் தாம்பரம் மதுவிலக்கு போலீசார். அப்போது ரயிலில் இருந்து வந்தவர்களில் சந்தேகத்திற்கு இடமான ஒருவரை பிடித்து விசாரித்ததில் அவர் ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீஸ் சார் அவரிடம் இருந்து 18 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். காவல்துறையின் விசாரணையில் அவரது பெயர் முகமது ரிஸ்வான் என்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்திருக்கிறது.
இவர் ஒடிசாவில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சில்லரை வியாபாரம் செய்து வந்திருக்கிறார் என்பதும் காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.