#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
துப்பாக்கிமுனையில் பிணைக்கைதியாக இருந்த 23 குழந்தைகள்! சினிமா பாணியில் கொலை நடுங்கவைத்த குற்றவாளி!
உத்திரபிரதேச மாநிலம் பார்ருகாபாத் என்ற பகுதியை சேர்ந்வர் சுபாஷ் பாதம். இவர் ஒரு கொலைகுற்றவாளி. இவர் சமீபத்தில்தான் ஜாமீனில் சிறையிலிருந்து வெளியில் வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் அவர் தனது மகளுக்கு பிறந்தநாள் எனக்கூறி உள்ளூரை சேர்ந்த 23 சிறுவர்களை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் அவர்களை தனது வீட்டின் அடித்தளத்தில் அடைத்துவைத்து கதவை சாத்திக் கொண்டார்.
இந்நிலையில் நீண்ட நேரமாகியும் குழந்தைகள் யாரும் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த சிறுவர்களின் பெற்றோர்கள் சுபாஷ் வீட்டு கதவை தட்டியுள்ளனர். ஆனால் அவர் துப்பாக்கியைகாட்டி மிரட்டல் விடுத்துள்ளார். அதனை தொடர்ந்து இதுகுறித்து போலீசாருக்கு தகவலளிக்கப்பட்டு அவர்கள் அங்கு விரைந்தனர்.ஆனால் சுபாஷ் பாதம் வீட்டிற்குள் 30 கிலோ வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டியுள்ளார்.
அதனை தொடர்ந்து கமாண்டோ வீரர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் உள்ளே நுழைந்தனர். அப்பொழுது அவர் சுட்டதில் 3 காவலர்கள் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர். பின்னர் 8 மணி நேர தீவிர போராட்டத்திற்கு பிறகு சுபாஷ் பாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் 23 சிறுவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் செங்கற்களையும் கற்களையும் வீசியதில் சுபாஷ் மனைவி பலத்த காயமடைந்தார். அதனை தொடர்ந்து அவர் இன்று உயிரிழந்தார்.23 குழந்தைகளையும் பத்திரமாக மீட்ட போலீஸார் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு அரசு பாராட்டு தெரிவித்துள்ளது.