திருமண வீட்டில் திருட்டு பிரச்சனை.. பெண்களை மானபங்கம் செய்து அட்டகாசம்..!
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தவளக்குப்பம், நாணமேடு மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் மாயகிருஷ்ணன். இவரின் மனைவி லட்சுமி (வயது 32). லட்சுமியின் சகோதரர் கலைவாணன். இவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, அங்குள்ள அபிஷேகப்பாக்கம் நகரில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் வைத்து நடைபெற்றது.
இதற்காக விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிலையில், வேலைக்கு வந்த பெண்கள் சமையல் பொருட்களை திருடி இருக்கின்றனர். இதனைக்கண்ட லட்சுமி அவர்களை தட்டிக்கேட்டு, சமுதாய நலக்கூட மேலாளரிடம் முறையிட்டுள்ளார். இதனால் லட்சுமி தரப்புக்கும் - சமுதாய நலக்கூடத்தில் பணியாற்றும் பெண்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வரவேற்பு நிகழ்ச்சி நல்லமுறையில் நடந்து முடக்க வேண்டும் என்பதால், லட்சுமியின் தரப்பினர் சண்டையை கைவிட்டு வேலைகளை செய்து வந்துள்ளனர். இரவு 11 மணியளவில் அனைவரும் சாப்பிட்டு முடித்துவிட்ட நிலையில், அப்போது வந்த கும்பல் ஒன்று சாப்பிட வேண்டும் என கூறியுள்ளது. அப்போது, சாம்பார் மட்டுமே மீதம் இருந்ததால், சாம்பார் மற்றும் சாதம் மட்டுமே சாப்பிட இருப்பதாக லட்சுமி தெரிவித்துள்ளார்.
சமையல் பொருட்கள் திருட்டு சம்பவத்தால் ஆத்திரத்தில் இருந்த கும்பல், ஏற்பாடு செய்திருந்த அடியாட்கள் சாம்பார் சாப்பிடத்தான் இங்கு வந்தோமா? என்று கேள்வி எழுப்பியவாறு லட்சுமியை சாம்பார் வாளியால் தாக்கி இருக்கிறது. இதனால் லட்சுமி அலறவே, மண்டபத்தில் இருந்த உறவினர்கள் குவிந்துள்ளனர்.
தகாத வார்த்தையால் திருமண வீட்டாரை வசைபாடிய கும்பல், லட்சுமியின் அக்கா மஞ்சுளா, அவரின் மகள் நந்தினி ஆகியோரை பீர் பாட்டிலால் தாக்கி, நந்தினியின் ஆடையை கிழித்து மானபங்கம் செய்துள்ளது. பெண்களின் அலறல் சத்தம் கேட்டு ஆட்கள் கம்பும், கட்டையுமாக வந்ததை பார்த்து கும்பல் தப்பி சென்றுள்ளது.
இதனையடுத்து, தாக்குதலில் காயமடைந்த லட்சுமி, மஞ்சுளா மாறும் நந்தினி ஆகியோர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டனர். இந்த விஷயம் தொடர்பாக லட்சுமி தவளக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து எதிரிகளை தேடி வருகின்றனர்.