#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கடலூர் ரௌடியை தூக்கிய பாண்டிச்சேரி போலிஸ்: நடுரோட்டில் கதறல் சம்பவம்.!
கடலூர் மாவட்டத்தைச் சார்ந்த பிரபல ரவுடி பிரபாகரன். இவரின் மீது கொலை, குண்டு வீச்சு உட்பட பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்நிலையில் வழக்கு தொடர்பாக புதுச்சேரி மாநில காவல்துறையினர் கடலூர் வந்து பிரபாகரனை தங்களது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்ல முற்பட்டனர்.
காவல்துறையினர் மாற்று சீருடையில் வந்ததாக தெரிய வருகிறது. இதனை அடுத்து கடலூர், பாரதி சாலையில் அதிகாரிகளின் பிடியிலிருந்து பிரபாகரன் தப்பிச்செல்ல முயற்சி செய்ய, பிரபாகரனின் ஆதரவாளர்களும் அதற்கு உடந்தையாக செயல்பட்டு இருக்கின்றனர்.
புதுச்சேரி காவல்துறையினர் பிரபாகரனை விடாமல் பிடித்துக்கொள்ள நடுரோட்டில் இந்த சம்பவம் நடந்ததால் என்ன நடந்தது? என்று தெரியாமல் கூட்டம் குவிந்தது. மேலும் போக்குவரத்து காவல்துறையினரும் நிகழ்வு இடத்திலிருந்து சம்பவம் தொடர்பாக விசாரித்து உடனடியாக கடலூர் நகர காவல்நிலையத்திற்கு அனைவரையும் அனுப்பி வைத்தனர். அங்கிருந்து பிரபாகரன் புதுச்சேரிக்கு காவல்துறையினரால் அனுப்பி வைக்கப்பட்டார்.