#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
யாருக்கெல்லாம் பொங்கல் போனஸ்? தமிழக அரசு அறிவிப்பால் குஷியில் அரசு ஊழியர்கள்!
சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு ரூ.3,000, சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூ.1,000 பொங்கல் போனசாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் ஆண்டு தோறும் பொங்கல் போனஸ் வழங்கி வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.3,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தற்காலிக அரசு ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்புகள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இந்த போனஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியம் பெற்று வருபவர்களில், சி மற்றும் டி பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், சத்துணவு, அங்கன்வாடி போன்றவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் பொங்கல் போனஸ் ரூ.500 வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.