தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
அண்ணா சமாதியில் ஒரு முதுகலை பட்டதாரி செய்யும் வேலையா இது! பதறிப்போன மக்கள்!
தமிழக அரசியலில் மக்களிடம் அதிகம் இடம் பிடித்த தலைவர் எம்.ஜி.ஆர். 1987-ம் ஆண்டு மரணம் அடைந்தார்.
இவரின் உடல் சென்னை மெரினாவில் அடக்கம் செய்யப்பட்ட போது, எம்.ஜி.ஆர். கையில் கட்டி இருந்த கை கடிகாரத்தை அகற்றவில்லை. அந்த கடிகாரத்துடனேயே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டு விட்டது. இதன் பின்னர் எம்.ஜி. ஆரின் கடிகாரம் ஓடிக் கொண்டே இருப்பதாக அவரது ரசிகர்களும், அ.தி. மு.க.வினர் நம்பினர்.
சமாதியில் காதை வைத்து கேட்டால் டிக் டிக் என கடிகாரம் ஓடும் சத்தம் கேட்பதாகவும் கூறப்பட்டது. இதனையடுத்து சென்னை மெரினாவிற்கு எம்ஜிஆர் சமாதியை பார்க்க வரும் அனைவரும் அவரின் சமாதியின் மேல் புறம் காதை வைத்து கேட்டு விட்டு செல்கின்றனர்.
எம்.ஜி.ஆர். இறந்து 31 ஆண்டுகள் ஆகி விட்டது. இப்போதும் எம்.ஜி.ஆரின் கை கடிகாரம் ஓடுகிறது என்கிற நம்பிக்கையிலே அங்கு வரும் அனைவரும் காதை வைத்து கேட்கின்றனர். ஒருவர் காதை வைத்து கேட்டபின்பு டிக் டிக் என்ன சத்தம் வருகிறது என கூறுகிறார். அதேபோல் பிறகு வரும் அனைவரும் காதை வைத்து கேட்ட பின்பு ஆமாம் டிக் டிக் என சத்தம் வருகிறது என கூறுகின்றனர்.
இதேபோல் நேற்று சென்னை மெரினா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டம் அலைமோதியது அங்கு ஒரு இளைஞர் அண்ணாவின் சமாதியில் காதை வைத்து எதையோ ஒன்றை கேட்டுக் கொண்டிருந்தார்.
அதை பார்த்துக்கொண்டிருந்த பத்திரிக்கையாளர் ஒருவர் அவரை அழைத்து நீங்கள் அங்கு என்ன செய்தீர்கள் என கேட்டார் அதற்கு பதில் அளித்த அவர் சமாதியில் காதை வைத்துக் கேட்டால் ஏதோ சத்தம் வரும் என்று எனக்கு கூறினார்கள் அதனால்தான் கேட்டேன் நானும் காதை வைத்துக் கேட்டேன் டிக்டிக் என சத்தம் வந்தது என கூறினார்.
பின்பு இவர் செய்த செயலை பார்த்த பின்னர், அங்கு வந்த அனைவரும் அண்ணா சமாதியில் மேற்புறம் காதை வைத்து கேட்ட பின்பே சென்றனர். அதை பார்த்த அந்த பத்திரிக்கையாளர், அந்த இளைஞனிடம் நீங்கள் என்ன படித்துள்ளீர்கள் என கேட்டார். அதற்கு பதிலளித்த அந்த இளைஞர் நான் MCA முடித்துவிட்டு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்து வருகிறேன் என கூறினார்.
ஒரு படித்த முதுகலை பட்டதாரி செய்த செயலைப் பார்த்து பின் வரும் அனைவரும் அதேபோல் கடைபிடிக்கின்றனர். இதேபோலதான் எம்ஜிஆர் சமாதியில் தற்போது வரை நடைபெற்று வருகிறது. மேலும் ஒரு படித்த இளைஞரே இவ்வாறு செய்தது அங்குள்ளவர்களை அதிர்ச்சியடைய வைத்தது. பின்பு அங்கு நின்ற 2 பத்திரிக்கையாளர்கள் அங்கு வந்து, காதை வைத்து கேட்பவர்களிடம் இது பற்றிக் கூறி அதை தடுத்து நிறுத்தினர்.