பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
"அவருக்கு இப்படி நடக்கும் என்று கனவில்கூட நினைக்கவில்லை" விஜயகாந்த் குறித்து கண்கலங்கிய பிரேமலதா!!
விஜயகாந்த் பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக தேமுதிக கட்சி சார்பாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று தேமுதிக தொண்டர்களை அக்கட்சியின் தலைவரான விஜயகாந்த் சந்தித்தார்.
இதனால் சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள தேமுதிக கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சி தொண்டர்களை கேப்டன் விஜயகாந்த் சந்தித்துள்ளார். இதனால் கட்சித் தொண்டர்கள் அனைவரும் தலைவர் விஜயகாந்தை சந்திப்பதற்காக ஆவலுடன் காத்திருந்து சந்தித்துள்ளார்.
மேலும், செய்தியாளர்களை சந்தித்து பேசிய விஜயகாந்த் மனைவி பிரேமலதாவிடம், ' நீங்கள் நேசித்த உங்கள் கணவர் உடல்நலம் பாதிக்கப்பட்ட போது எப்படி உணர்ந்தீர்கள்?' என்று கேள்வியெழுப்பிருந்தார்.
அதற்கு பதிலளித்த பிரேமலதா, 'அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட போது நான் அப்படியே உடைந்து போனேன். இப்படி ஒருநிலை வரும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. அவர் ஆரோக்கியத்துடன் நடித்து கொண்டிருந்த போதே அவருக்கு பல நாட்கள் உணவு ஊட்டி விட்டுருக்கிறேன்.
அவர் அம்மா இல்லாமல் தான் வளர்ந்தார். அதனால், அவருக்கு நான் ஒரு அம்மாவாக இருந்திருக்கிறேன். அமெரிக்கா, மலேசியா, துபாய் என்று பல நாட்டுக்கு அழைத்து சென்று சிகிச்சை செய்தேன்' என்று கண்ணீர் மல்க பேசியிருந்தார்.