கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
பேரூந்துநிலையத்தில் மாணவிகளிடம் ஆபாச சைகை காட்டிய வாலிபர்.! செம்ம பாடம் கற்பித்த பொதுமக்கள்.!
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் மாணவிகள் முன்பு ஆபாச சைகை காட்டிய வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம ஆதி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க, கொள்கைகள் வகுத்து தமிழ்நாடு அரசு செயல்படுகிறது.
இந்தநிலையில், கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் இருந்து நாகர்கோவில் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் செல்கின்றனர். இவர்கள் மார்த்தாண்டம் காந்தி மைதானம் மற்றும் மேம்பாலம் பகுதிகளில் பேருந்துக்காக காத்து நிற்பது வழக்கம். இந்தநிலையில், நேற்று காலையில் நாகர்கோவிலுக்கு செல்வதற்காக மாணவிகள் மற்றும் பெண்கள் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் பேருந்துக்காக காத்திருந்துள்ளனர்.
அப்போது டிப்டாப் உடை அணிந்து கொண்டு அங்கு வந்த வாலிபர் சில மாணவிகளிடம் சென்று தானாகவே பேச்சுக்கொடுத்துள்ளார். யாரும் அவரை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் அந்த வாலிபர் மாணவிகள் முன்பு நின்று ஆபாச சைகை காட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் அலறல் சத்தம் போட்டனர்.
இதனையடுத்து அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்களும், பொதுமக்களும் ஓடி வந்தனர். இதனைப்பார்த்த அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோடினார்.
ஆனால் பொதுமக்கள் விடமால் அவரை துரத்தி சென்று மேம்பாலத்தின் கீழ் பகுதியில் வைத்து மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த நபரை காவல்நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.