பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.!! தைப்பூச திருவிழா நிகழ்ச்சிகளை பக்தர்கள் பார்ப்பதற்கு ஏற்பாடு.!



Public not allowed thai poosam festival in palani

பழனி முருகன் கோயில் தைப்பூச திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஜனவரி 31-ஆம் தேதி வரை கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, தமிழகத்தில் ஜனவரி 31-ஆம் தேதி வரை இரவுநேர ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து ஜனவரி 14 முதல் 18 வரை அனைத்து வழிபாட்டு தளங்களிலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பழனி முருகன் கோயில் தைப்பூச திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மேலும் இன்று தைப்பூச திருவிழா கொடியேற்றம், பக்தர்கள் கலந்து கொள்ளாமல் கோவில் மூலம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தைப்பூச திருவிழா நிகழ்ச்சிகள் கோவில் வலைத்தளம், யூ-டியூப் சேனல் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் விசாகன் தெரிவித்துள்ளார்.